‘கிரீடம்’ படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க ஏகப்பட்ட ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டிருக்கின்றனர். ‘சிவாஜி’க்கு 25 லட்ச ரூபாய் வாங்கியதாகச் சொல்லப்பட்டாலும், இப்படத்துக்கு கேட்டபோது, 45 லட்ச ரூபாய் சம்பளம் கேட்டு மிரள வைத்திருக்கிறார் ஸ்ரேயா. அவர்தான் இப்படி என்றால், ‘கேடி’ படத்தில் அறிமுகமான இலியானா, 65 லட்ச ரூபாய் தந்தால் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். பிறகு த்ரிஷா, சினேகா, நயன்தாரா, சார்மி போன்றோரிடம் பேசியுள்ளனர். ‘திருப்பதி’க்குப் பிறகு மீண்டும் அஜீத் ஜோடியாக நடிக்க சதா விரும்பினாலும், ஒரே காம்பினேஷன் இருந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும் என்று, புது நாயகிக்கு வலைவீசி வருகின்றனர்.
Source: Tamilmurasu