அஜீத் நடிக்கும் ‘ஆழ்வார்’



ஸ்ரீ ராஜகாளியம்மன் சூப்பர் பிலிம்ஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரிக்கும் படம் ‘ஆழ்வார்’. இதில் அஜீத், அசின் ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் கீர்த்தி சாவ்லா, பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: ரமேஷ்.ஜி, இசை: ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்: வாலி, வசனம்: எஸ்.ரவிமரியா.

எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் செல்லா கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் பிலிம்சிட்டியில் நடந்து வருகிறது.